ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5இல் நுழைந்த ஷுப்மன்; டாப் 10ஐ இழந்த ரோஹித்!
ஐசிசி ஒருநாள் கிரிக்க்ட் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டானபோதும் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஃபகர் ஜமான் நான்கு பந்துகளில் இரண்டு பந்துகள் எடுத்த நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கினார். அதேபோல், நேற்றைய போட்டியில் 94 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த இமாம்-உல்-ஹக் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
ஃபகர் ஜமானின் வீழ்ச்சியால் இந்தியாவின் தொடக்க வீரர் சுப்மன் கில் ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான முதல் 10 இடங்களில் வேறு எந்த மாற்றமும் இல்லை. பாபர் அசாம் 880 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ஸி வான்டெர் டுசென் 777 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், இமாம், கில் மற்றும் ஜமான் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளனர்.
ஹாரி டெக்டர், டேவிட் வார்னர், குயின்டன் டி காக், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்த 5 இடங்களை பிடித்து டாப் 10 தரவரிசைக்குள் இருக்கின்றனர். அதேசம்யம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாப் 10 இடத்தை இழந்து 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒருநாள் தரவரிசையில் டாப் 10 இடத்தை பிடித்த வீரர்க:
- பாபர் ஆஸம் – 880 புள்ளிகள்
- ராஸ்ஸி வான் டெர் டுசென் – 777 புள்ளிகள்
- இமாம்- உல்- ஹக் – 752 புள்ளிகள்
- சுப்மன் கில் – 743 புள்ளிகள்
- ஃபகார் ஜமான் – 740 புள்ளிகள்
- ஹாரி டெக்டர் – 726 புள்ளிகள்
- டேவிட் வார்னர் – 726 புள்ளிகள்
- குயின்டன் டிகாக் – 718 புள்ளிகள்
- விராட் கோலி – 705 புள்ளிகள்
- ஸ்டீவ் ஸ்மித் – 702 புள்ளிகள்