விராட், தோனி சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசாத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியானது 14 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஷுப்மன் கில் விராட் கோலி மாற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஷுப்மான் கில் 43 ரன்களைச் சேர்த்ததன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 500 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் 26 வயதிற்குள் கேப்டனாக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.
இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி கடந்த 2013அம் ஆண்டு 634 ரன்களையும், அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2020ஆம் ஆண்டு 519 ரன்களையும் சேர்த்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஷுப்மன் கில்லும் அவர்களுடன் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 வயதிற்குள் ஐபிஎல் கேப்டனாக 500 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள்
- விராட் கோலி - 634 ரன்கள் (2013)
- ஷ்ரேயாஸ் ஐயர் - 519 ரன்கள் (2020)
- ஷுப்மான் கில் - 501 ரன்கள் (2025)
இதுதவிர்த்து இப்போட்டியில் 46 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த போதிலும், ஷுப்மான் கில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார், இதன் மூலம் அவர் மகேந்திர சிங் தோனியின் தனித்துவமான சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் 100 அல்லது அதற்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்த போதிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷுப்மான் கில் பெற்றார். அவருக்கு முன் எம் எஸ் தோனி, ஹனுமா விஹாரி ஆகியோர் இதனைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பெசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 43 ரன்களையும், ஜோஸ் பட்லர் 30 ரன்களையும், ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் ராகுல் திவேத்தியா 11 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தானர். இதன்மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.