மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்!

Updated: Thu, Dec 28 2023 21:57 IST
மூன்றாம் இடத்தில் தொடர்ந்து சொதப்பிய ஷுப்மன் கில்; ரசிகர்கள் விமர்சனம்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை வெல்லும் வாய்ப்பை தழுவ விட்டது. இந்த போட்டியில் இளம் வீரர்களை நம்பி பிசிசிஐ தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது. ஆனால் இளம் வீரர்களின் திறமையை தென் ஆப்பிரிக்க ஆடுகளமும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும் கடுமையாக சோதித்து விட்டனர். 

இதில் முதலில் சிக்கியது கிரிக்கெட்டின் புதிய இளவரசன் என்ற அழைக்கப்படும் கில் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் மூன்றாவது இடத்தில் இறங்குகிறேன் என்று கூறி புஜாராவின் இடத்திற்கு ஷுப்மன் கில் ஆப்பு வைத்தார். ஆனால் கில் நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி ஒரு முறை கூட 30 ரன்களை தொடவில்லை. 

முதல் இன்னிங்ஸில் இரண்டு ரன்களில் மோசமான சாட்டை ஆட்டமிழந்த கில், இரண்டாவது இன்னிங்ஸில் செய்த தவறை திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தார் போல் கில்லும் அபாரமாக விளையாடி பவுண்டரிகளை சேர்த்தார். நெருக்கடி சூழ்ந்திருக்கும் நிலையில் அதிரடியாக விளையாடி அதிலிருந்து தப்பிக்கும் யுத்தியை கில் பயன்படுத்தினார். 

ஆனால் ஷுப்மன் கில்லின் இந்த அதிரடி ஆட்டத்தை பயன்படுத்திக்கொண்டு யான்சன் ஸ்டெம்புக்கு குறி வைத்து அவரை கிளீன் போல்ட் ஆக்கினார். யான்சன் பந்தை கொஞ்சம் கூட கணிக்க முடியாத ஷுப்மன் கில் 37 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கில் மீண்டும் 30 ரன்கள் கூட தொட முடியாமல் வெளியேறினார். 

புஜாரா போன்ற வீரர் உடம்பிலாவது அடி வாங்கி பந்தை பழையதாகி மற்ற வீரர்கள் விளையாடுவதற்கு ஏதுவான சூழலை மாற்றி கொடுப்பார். ஆனால் கில் தன்னுடைய அனுபவமின்மையால் அதிரடியாக ஆட முற்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 131 ரன்களில் சுருண்டது. கில்லில் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. இதனால் புஜாராவை மீண்டும் அழைத்து விளையாட வையுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை