நேற்று கோலிக்கு எச்சரிக்கை; இன்று விதியை மீறிய பிசிசிஐ!

Updated: Sat, Aug 26 2023 12:48 IST
Image Source: Google

எதிர்வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களை ஒருங்கிணைத்து ஆலூரில் ஒரு பயிற்சி முகாமினை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் அனைவருக்கும் யோயோ டெஸ்ட் நடத்தப்பட்டு முடிந்துள்ளது.

அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வில் விராட் கோலி 17.2 புள்ளிகள் பெற்றதாக அவரே சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவர் அதிக யோ யோ மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த யோ யோ டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் யோ யோ டெஸ்டில் பங்கேற்றார்கள் என்றும் கூறப்படுகிறது. 16.5 புள்ளிகள் வரை அடிப்படை தகுதி புள்ளிகளாக வைத்து நடத்தப்படும் இந்த யோ டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியின் வீரர்களால் அணியில் இடம் பிடிக்க முடியும்.

அந்த வகையில் இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் 16.5 இலிருந்து 18 வரை எடுத்து தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. அதோடு இந்திய வீரர்களில் அதிகபட்சமாக விராட் கோலியையும் தாண்டி ஷுப்மன் கில் 18.7 புள்ளிகள் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. சமீப காலமாகவே தொடர்ச்சியாக ஓய்வின்றி அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வரும் ஷுப்மன் கில் இப்படி இந்த யோ யோ தேர்விலும் தனது பிட்னஸை அதிக அளவில் வெளிக்காட்டியுள்ள தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

 

அதேசமயம் விராட் கோலி தனது யோயோ உடற்தகுதி தேர்வின் மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது பிசிசிஐயின் விதிகளை மீறிய செயல் என இந்திய அணி வீரர்களுக்கு நேற்றைய தினம் எச்சரிக்கை ஒன்றை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று ஷுப்மன் கில்லின் யோ யோ உடற்க்தகுதித்தேர்வு மதிப்பெண்னை பிசிசிஐ பொதுவெளியில் அறிவித்துள்ள பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை