இங்கிலாந்தில் முகமது யூசுஃப் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

Updated: Sun, Jul 27 2025 13:00 IST
Image Source: Google

Shubman Gill Record: இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன் பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதன்மூலம் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேஎல் ராகுல் 87 ரன்களையும், ஷுப்மன் கில் 78 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சுப்மன் கில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஷுப்மன் கில் 78 ரன்களைச் சேர்ததன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். பாகிஸ்தானின் முகமது யூசுப்பின் 19 ஆண்டுகால சாதனையை முறியடிக்க கில்லுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, அதை நான்காம் நாளின் இரண்டாவது அமர்வில் அவர் முடித்தார்.

முன்னதாக முகமது யூசுப் 2006 இல் இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 631 ரன்கள் எடுத்திருந்தார், அதில் 2 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதமும் அடங்கும். ஆனால் தற்போது இப்போது கில் 697 ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் அவர் இரண்டு சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும் அடித்துள்ளார். மேற்கொண்டு அவர் 700 ரன்களைக் கடக்கும் பட்சத்தில் இங்கிலாந்தில் அதனை எட்டிய முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெறுவார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய பேட்ஸ்மேன்கள்

  • ஷுப்மான் கில் - 632+ ரன்கள் (2025, இந்தியா)
  • முகமது யூசுப் - 631 ரன்கள் (2006, பாகிஸ்தான்)
  • ராகுல் டிராவிட் - 602 ரன்கள் (2002, இந்தியா)
  • விராட் கோலி - 593 ரன்கள் (2018, இந்தியா)
  • சுனில் கவாஸ்கர் - 542 ரன்கள் (1979, இந்தியா)

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை