வலைபயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினர்.
தற்சமயம் ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் அடுத்த போட்டியில் இருந்து அவர் மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன்,அணியின் தொடக்க வீரராகவும் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் எந்த வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய ஷுப்மன் கில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் ஒருவேளை ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிங்கும் பட்சத்தில் கேஎல் ராகுலை மூன்றாம் வரிசையில் பயன்படுத்தலாம் என்றும் சிலர் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் தான் ஷுப்மன் கில் தனது காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஷுப்மன் கில் இன்றைய தினம் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஷுப்மன் கில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை ஷுப்மன் கில் முழு தகுதியை எட்டும் பட்சத்தில், யாருடைய இடத்தில் களமிறங்கிவார் என்ற கேள்வி தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.