பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகும் ஷுப்மன் கில்?

Updated: Wed, Nov 27 2024 11:10 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட்  தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணியும் 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 46 ரன்கள் பின் தங்கியது. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோரது சதங்கள் காரணமாக 487 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி 100 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளைடினார். 

இதில் டிரவிஸ் ஹெட் 89 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 47 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனா; அந்த அணி 238 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றார். மேலும் இரு அணிகளுக்கும் இடையேய பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டமும் சில தினங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது காயமடைந்த இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில், தனது காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி பெரும் சிக்கலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Also Read: Funding To Save Test Cricket

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை