ஷுப்மன் கில்லும் பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய கேள்விக்குறி தான் - தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Dec 30 2023 18:47 IST
ஷுப்மன் கில்லும் பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய கேள்விக்குறி தான் - தினேஷ் கார்த்திக்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள தோல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றிபெற்ற இந்திய அணி எப்படி தென் ஆப்பிரிக்கா மண்ணில் இன்னிங்ஸ் தோல்வியை பெற்றது என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இதற்கு இந்திய அணியின் அனுபவமில்லாத பவுலிங் அட்டாக் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என்று 3 இளம் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடுகின்றனர். இதனால் அவர்களிடமிருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்ச ரன்களையாவது சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. இதனிடையே இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஃபார்மில் இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், “ஷுப்மன் கில்லும் பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய கேள்விக்குறி தான். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுப்மன் கில் இதுவரை விளையாடவில்லை. அதேபோல் சுப்மன் கில்லும் அவரின் டெஸ்ட் பேட்டிங் சராசரியை பற்றியும், தொடர்ந்து 30 ரன்களிலேயே ஆட்டமிழந்து வருவதையும் அறிவார் என்று நினைக்கிறேன். 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் இதுவரை அவரின் பேட்டிங் சராசரியும் பெரியளவில் இல்லை. என்னை பொறுத்தவரை அவர் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். 

ஒருவேளை அடுத்த போட்டியிலும் சுப்மன் கில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவரின் இடம் நிச்சயம் கேள்விக்குறிக்குள்ளாக்கப்படும். இந்திய மிடில் ஆர்டரில் மிஸ்ஸாகும் பேட்ஸ்மேன் என்றால் அது சர்ஃபராஸ் கான் தான். அவர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் அண்மையில் இந்திய தொடக்க வீரராக அறிமுகமான ரஜத் படிதர் விரைவில் இந்திய அணி டெஸ்ட் அணிக்குள் வருவார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை