துலீப் கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கொண்டு இந்தாண்டு துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளீட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடரின் டீம் ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், டீம் பி அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரும், டீம் சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டீம் டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட்தொடரில் டீம் ஏ அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ஷுப்மன் கில் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஷுப்மன் கில் தனது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஏனெனில் எதிர்வரும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஷுப்மன் கில் உள்ளார்.
மேலும் இந்த இரு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவரால், எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். ஏனெனில் சமீப காலமாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் ஷுப்மன் கில் மீதான விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷுப்மன் கில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துலீக் கோப்பை தொடருக்கான அணிகள்
அணி ஏ: ஷுப்மான் கில் (கே), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ்,ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத்.
அணி பி: அபிமன்யு ஈஸ்வரன் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி (உடற்தகுதி), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என். ஜெகதீசன்.
அணி சி: ருதுராஜ் கெய்க்வாட் (கே), சாய் சுதர்ஷன், ராஜத் படிதார், அபிஷேக் போரல், சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், உம்ரான் மாலிக், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல், சந்தீப் வாரியர்.
Also Read: Funding To Save Test Cricket
அணி டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கே), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் பாடிக்கல், இஷான் கிஷன், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத், சவுரப் குமார்.