கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இம்முறை 2023ஆம் ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.

Advertisement

இதன் காரணமாக இம்முறை நிச்சயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு பலமான அணியாக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை நமக்கு தான் என்று ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அணியில் இடம் பெற்றுள்ள ஷுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க தயாராகி வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட இருப்பது குறித்து ஷுப்மன் கில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய அவர், “இது என்னுடைய முதல் உலகக் கோப்பை தொடர். இந்திய அணிக்காக இது போன்ற ஒரு பெரிய தொடரில் விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் சிறுவயதில் இருக்கும்போது இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது அந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உணர்வை தருகிறது. 

எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதே பார்முடன் உலக கோப்பை தொடர்க்கும் செல்வேன்” என்று ஷுப்மன் கில் கூறியிருந்தார். இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் ஆறு போட்டியில் பங்கேற்ற ஷுப்மன் கில் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் என 75 ரன்கள் சராசரியுடன் 300 ரன்களை குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News