நீண்ட காலமாக நான் பார்த்த தன்னலமற்ற இந்திய வீரர் அவர் - ரோஹித் சர்மா குறித்து சைமன் டௌல்!

Updated: Fri, Dec 22 2023 20:53 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.

அதில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பின் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வெடுத்த ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக களமிறங்க உள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிரணி பவுலர்களை பந்தாடிய அவர் 597 ரன்கள் குவித்து முழுமூச்சுடன் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

குறிப்பாக தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுவதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து சுயநலமின்றி விளையாடும் வீரராக ரோஹித் சர்மாவை தாம் பார்ப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “2023 உலகக் கோப்பை தோல்வி அவரை சற்று சுரண்டலாம். கடந்த 10 – 18 மாதங்களில் ரோகித் சர்மாவை பற்றி கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாக நான் பார்த்த தன்னலமற்ற இந்திய வீரராக அவர் இருக்கிறார். அவர் அணி வெல்வதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான வழியை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். 

உலகக் கோப்பையில் அவர் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடியதால் மிடில் ஆர்டரில் விளையாடிய வீரர்கள் தாங்கள் விரும்பிய வழியில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். எனவே டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறிய மாற்றம் செய்தால் போதும். பெரிய மாற்றங்கள் தேவையில்லை. இந்த டெஸ்ட் தொடரிலும் நான் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதை விரும்புகிறேன். அதை நாம் இந்த டெஸ்ட் தொடரில் பார்ப்போம் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை