நான்காவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் - உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!

Updated: Mon, Jul 21 2025 20:19 IST
Image Source: Google

ENG vs IND, 4th Test: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்பது உறுதியுள்ளது.  

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தற்சமயம் இங்கிலாந்து அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் எழுந்திருந்தன. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது. இதில் அவர் ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் இப்போட்டிக்கான லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தது. 

இப்போட்டிக்கு முன்னதாக செயதியாளர்களிடம் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பிடிப்பார் என்று உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “எனக்குத் தெரிந்தவரை ஜஸ்பிரித் பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவார். ஆகாஷ் தீப் தற்சாமயம் காயத்தில் இருந்து மீண்டு பந்துவீசி வருகிறார். இருப்பினும் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகின்றனர். அதனால் எங்களுடைய திட்டத்தை எளிதாக வைத்துள்ளோம்” என்று கூறினார். 

முன்னதாக பற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேசமயம் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கும் காயம் காரணமாக நான்காவது டெஸ்டியில் இருந்து விலகியதை அடுத்து, ஹாரியானாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் மான்செஸ்டர் டெஸ்டில் அவர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை