SL vs AUS, 2nd Test: சண்டிமால் அதிரடி சதம்; இலங்கை முன்னிலை!

Updated: Sun, Jul 10 2022 18:20 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இலக்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. 

இதில் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரடண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று கலேவில் தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்  செய்த ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது. 

அதன்பின் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 85 ரன்களுடனும், ஆஞ்சலோ மேத்யூஸ் 52 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சண்டிமல் சதமடித்து அசத்த, கமிந்து மெண்டீஸும் அரைசதத்தைக் கடந்தார்.

இதன்மூலம் இலங்கை அணியும் முன்னிலைப் பெற்றது. அதன்பின் கமிந்து மெண்டிஸ் 61 ரன்களில் ஆட்டமிழக்க, நிரோஷன் டிக்வெல்லா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 431 ரன்களைச் சேர்த்துள்ளது. தினேஷ் சண்டிமல் 118 ரன்களுடனும், ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை