இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட், சட்டோகிராமில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, 153 ஓவர்களில் 397 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நயீம் ஹசன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதையடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 170.1 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 133, முஷ்ஃபிகுர் ரஹிம் 105 ரன்கள் எடுத்தார்கள். ரஜிதா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முதல் இன்னிங்ஸில் 68 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி, கடைசி நாளன்று கவனமாக விளையாடி 90.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

முதலில் 161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதஇலங்கை, அதன்பிறகு தினேஷ் சண்டிமலும் நிரோஷனும் பொறுப்புடன் விளையாடி தோல்வியைத் தவிர்த்தார்கள். சண்டிமல் 39, நிரோஷன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன் மூலம் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேத்யூஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2-வது டெஸ்ட், மே 23 அன்று மிர்புரில் தொடங்குகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News