Sri Lanka vs Bangladesh 2nd Test Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது. 

Advertisement

இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும். இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

SL vs BAN 2nd Test Match Details

மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
இடம் - சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப், கொழும்பு
நேரம்- ஜூன் 25, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

Sinhalese Sports Club, Colombo Pitch Report

இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 45 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 16 முறையும், முதலில் பந்துவீசிய அணி 15 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 325 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 182 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 756 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

SL vs BAN Test Head To Head Record

  • மொத்தம் - 26
  • இலங்கை - 20
  • வங்கதேசம் - 01
  • டிரா - 05

SL vs BAN 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - முஷ்ஃபிக்கூர் ரஹிம், தினேஷ் சண்டிமால், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், பதும் நிஷங்கா (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - கமிந்து மெண்டிஸ், நயீம் ஹசன்
  • பந்துவீச்சாளர்கள் - தைஜுல் இஸ்லாம், தரிந்து இஸ்லாம்.

SL vs BAN Predicted Playing 11

Advertisement

Sri Lanka Probable XI : பதும் நிஷங்க, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ், விஷ்வ ஃபெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ.

Bangladesh Probable XI : ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், நஹித் ராணா.

SL vs BAN 2nd Test Dream11 Prediction, SL vs BAN Dream11 Team, SL vs BAN Test Series, Fantasy Cricket Tips, SL vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sri Lanka vs Bangladesh

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News