இலங்கை vs இந்தியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Aug 01 2024 14:14 IST
Image Source: Cricketnmore

Sri Lanka vs India 1st ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

SL vs IND 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs இந்தியா 
  • இடம் - ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு
  • நேரம் - ஆகஸ்ட் 02, மதிய 2.30 மணி

SL vs IND 1st ODI Pitch Report

கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் இதுவரை 164 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன, அதில் 88 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 65 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

SL vs IND ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 168
  • இந்தியா - 99
  • இலங்கை - 57
  • முடிவில்லை - 12

SL vs IND 1st ODI: Where to Watch?

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்க முடியும். இந்த போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளமான சோனி லிவ் (SonyLIV) தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி ரசிகர்கள் நேலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka vs India 1st ODI Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமர்விக்ரம, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெலலாகே, வனிந்து ஹஷரங்கா, மகேஷ் தீக்சன, அசிதா ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா.

Sri Lanka vs India 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - கேஎல்ராகுல், குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் – குல்தீப் யாதவ், மகேஷ் தீக்ஷனா.

SL vs IND 1st ODI Dream11 Prediction, Today Match  SL vs IND, SL vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs India

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை