Sri Lanka vs India 1st T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று (ஜூலை 27) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இன்று நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்
இந்திய அணி
இந்திய அணியானது புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் காணும் முதல் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இத்தொடருக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்லும், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ரியான் பராக் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கிண்டனர்.
இவர்களுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோரு பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி இத்தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்திய அணி உத்தேச லெவன்: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த்/சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
இலங்கை அணி
நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான தோல்வியால் லீக் சுற்றுடனே வெளியேறிய இலங்கை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் அணியின் புதிய கேப்டனாக சரித் அசலங்காவும், புதிய தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யாவும் இந்த தொடரில் இருந்து பொறுப்பேற்று செயல்பட இருக்கிறார்கள். மேற்கொண்டு முன்னாள் கேப்டன் வநிந்து ஹசரங்கா சாதரண வீரராக மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளது.
இலங்கை அணியின் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், தினேஷ் சண்டிமல், பதும் நிஷங்கா, குசல் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ உள்ளிட்டோரும், பந்துவீச்சில், தில்ஷன் மதுஷன்கா, மதீஷா பதிரனா, மஹீஷ் தீக்ஷனாவும், ஆல்-ரவுண்டர்களாக வநிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது அந்த அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. இதனால் வலிமை வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
இலங்கை அணி உத்தேச லெவன் : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசால் மெண்டிஸ்,சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, மதீஷ பதிரானா, பினுரா ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.
Sri Lanka vs India 1st T20I Dream11 Team
விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குசால் பெரேரா
ஆல்ரவுண்டர்கள் - தசுன் ஷனகா, அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், மதீஷா பதிரானா