SL vs IND, 2nd ODI: நாளைய போட்டியில் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அரைசதம் கடந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு அதிவேகமாக 15ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 263 போட்டிகளில் விளையாடி 326 சிக்ஸர்களை விளாசி மூன்றாம் இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 301 ஒருநாள் போட்டிகளில் 331 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்தில் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நாளை ரோஹித் சர்மா மேற்கொண்டு 6 சிக்ஸர்களை விளாசும் பட்சத்தில் கெயிலின் சாதனையை முறியடிப்பார்.
அதேசமயம் இப்பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி 398 போட்டிகளில் விளையாடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறார். இச்சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மா மேற்கொண்டு 25 சிக்ஸர்களை அடிக்க வேண்டிவுள்ளது. மேலும் இன்னும் சில ஆண்டுகள் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதால் ஆச்சாதனையையும் அவர் முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், கலீல் அகமது, ரியான் பராக், ஹர்ஷித் ராணா.