இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்ற சஞ்சு சாம்சனிற்கு டி20 அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த ஒன்றைரை ஆண்டுகலாமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வரும் ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணி தேர்வாளர்கள் மீண்டும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வ்ருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த மூன்று வீரர்களின் நீக்கமானது ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “இந்திய அணியில் தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், முக்கிய வீரர்கள் இரண்டு உலகக் கோப்பைகளுக்கு இடையே மற்ற தொடர்களில் பெரிதளவில் விளையாடுவதில்லை என்பதை நீங்கள் அடிக்கடி பார்க்கிறீர்கள்.
அதன் காரணமாக வாய்ப்பினை பெறும் சில இளைஞர்கள் நன்றாக விளையாடும்போது, அவர் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளா, அதனால் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் மூத்த வீரர்கள் மீண்டு அணிக்கு திரும்பும் சமயத்தில் அவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன் காரணமாக சிறப்பாக செயல்படும் வீரர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கின்றனர்.
அதுதவிர்த்து அணியில் மாற்றம் நிகழும்போது - ஒரு புதிய பயிற்சியாளர், ஒரு புதிய கேப்டன் அல்லது புதிய தேர்வுக் குழுவினர் ஒன்றிணையும் போது சில நேரங்களில் அணிக்கு தெளிவான ஒரு முடிவானது எட்டப்படாமல் உள்ளன. மேலும் அவரவர் கருத்துகளில் சில் முறன்பாடுகள் ஏற்படுவதுடன் அது இடைவேளையை ஏற்படுத்துகிறது. சஞ்சு சாம்சனின் விஷயத்தில் அந்த இடைவெளி ஏனென்றால் தேர்வாளர்களின் சிந்தனையில் தெளிவு இல்லை.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஏனெனில் சஞ்சு சாம்சன் கடைசியாக விளையாடியபோது ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தார். ஆனால் தற்போது அவருக்கு ஒருநாள் அணியில் ஏன் இடமில்லை என்பதில் ஒரு தெளிவு கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதே கருத்தை முன்வைத்து பல முன்னாள் வீரர்களுக்கு சஞ்சு சாம்சனிற்கு ஏன் ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.