இலங்கை vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Sep 17 2024 12:36 IST
Image Source: Cricketnmore

Sri Lanka vs New Zealand 1st Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை (செப்.18) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணியானது கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி கடைசியாக விளையாட இருந்த டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SL vs NZ 1st Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
  • இடம் - கலே கிரிக்கெட் மைதானம், கலே
  • நேரம் - செப்டம்பர் 18, காலை 10 மணி (இந்திய நேரப்படி)

SL vs NZ 1st Test Pitch Report

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 44 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 23 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 365 ரன்கள். பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs NZ 1st Test: Where to Watch?

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனி பார்க்க விரும்புவோர் சோனி லிட் ஓடிடி தளத்திலும், ஃபேன் கோடி செயலியிலும் இப்போட்டியை நேரலையில் காண முடியும். 

SL vs NZ Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 38
  • நியூசிலாந்து - 18
  • இலங்கை - 09
  • முடிவில்லை - 11

Sri Lanka vs New Zealand 1st Test Probable Playing XI

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்த ஃபெர்னாண்டோ.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லாதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிம் சவுத்தி (கே), அஜாஸ் படேல்.

SL vs NZ 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் சண்டிமால்
  • பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன், பதும் நிஷங்க
  • ஆல்ரவுண்டர் - தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திர, கமிந்து மெண்டிஸ்
  • பந்துவீச்சாளர்கள் – அஜாஸ் பட்டேல், பிரபாத் ஜெயசூரிய, மிலன் ரத்நாயக்க.

SL vs NZ 1st Test Dream11 Prediction, SL vs NZ Dream11 Prediction, Today Match SL vs NZ, SL vs NZ Test Series, SL vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NZ Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs New Zealand

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை