Sri Lanka vs New Zealand 1st ODI Dream11 Prediction: நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன. 

Advertisement

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நாளை தொடங்கவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் ஏற்கெனவே டி20 தொடரை போராடி சமன்செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடரில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர்.

Advertisement

SL vs NZ 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
  • இடம் - ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம் - நவம்பர் 13, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

SL vs NZ 1st ODI Pitch Report

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 69 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 32 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 34 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 212 ரன்கள். பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs NZ 1st ODI: Where to Watch?

Advertisement

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனி பார்க்க விரும்புவோர் சோனி லிட் ஓடிடி தளத்திலும், ஃபேன் கோடி செயலியிலும் இப்போட்டியை நேரலையில் காண முடியும். 

SL vs NZ ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 102
  • நியூசிலாந்து - 55
  • இலங்கை - 41
  • முடிவில்லை - 09

Sri Lanka vs New Zealand 1st ODI Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் பெரேரா/அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க (கே), சதீரா சமரவிக்ரமா, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, அசிதா ஃபெர்னனடோ, தில்ஷன் மதுஷங்கா

நியூசிலாந்து உத்தேச லெவன்: ஹென்றி நிக்கோலஸ், வில் யங், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்ச் ஹே, மிட்செல் சான்ட்னர் (கேட்ச்), இஷ் சோதி, ஜகாரி ஃபௌல்க்ஸ், ஜேக்கப் டஃபி, ஆடம் மில்னே

SL vs NZ 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - வில் யங், பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ்
  • ஆல்ரவுண்டர் - கிளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), மிட்செல் சான்ட்னர், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா
  • பந்துவீச்சாளர்கள் – மஹீஷ் தீக்ஷனா, ஆடம் மில்னே
Advertisement

SL vs NZ 1st ODI Dream11 Prediction, SL vs NZ Dream11 Prediction, Today Match SL vs NZ, SL vs NZ ODI Series, SL vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News