Sri Lanka vs New Zealand 1st T20I Dream11 Prediction: நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், நியூசிலாந்தையும் ஒயிட்வாஷ் செய்து சாதனைப்படைத்திருந்தது. 

Advertisement

இந்நிலையில் நியூசிலாந்து அணி மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி இந்த தொடர்களில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என ரசிகர்கள் காத்துள்ளனர். அதேசமயம் இலங்கை அணியோ சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது ஆதிக்கத்தைத் தொடரும் முயற்சியில் இத்தொடரை எதிர்கொள்வதாள் ரசிர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Advertisement

SL vs NZ 1st T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
  • இடம் - ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம் - நவம்பர் 09, இரவு 7மணி (இந்திய நேரப்படி)

SL vs NZ 1st T20I Pitch Report

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 24 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்கள். பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs NZ 1st T20I: Where to Watch?

Advertisement

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனி பார்க்க விரும்புவோர் சோனி லிட் ஓடிடி தளத்திலும், ஃபேன் கோடி செயலியிலும் இப்போட்டியை நேரலையில் காண முடியும். 

SL vs NZ T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 23
  • நியூசிலாந்து - 13
  • இலங்கை - 07
  • முடிவில்லை - 03

Sri Lanka vs New Zealand 1st T20I Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசால் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கே), பனுகா ராஜபக்ஷா, வநிந்து ஹசரங்கா, சமிந்து விக்ரமசிங்கே, மஹீஷ் தீக்ஷ்னா, அசிதா ஃபெர்னாண்டோ, மதீஷா பதிரானா

நியூசிலாந்து உத்தேச லெவன்: வில் யங், டிம் ராபின்சன், ஹென்றி நிக்கோலஸ், மார்க் சாப்மேன், கிளென் பிலீப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் ஹெய், ஸகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் (கே), இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன்.

SL vs NZ 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ், குசால் பெரேரா (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, வில் யங், ஹென்றி நிக்கோலஸ்
  • ஆல்ரவுண்டர் - கிளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), கமிந்து மெண்டிஸ், வநிந்து ஹசரங்கா
  • பந்துவீச்சாளர்கள் – மிட்செல் சான்ட்னர், லோக்கி ஃபெர்குசன், மதீஷா பதிரானா
Advertisement

SL vs NZ 1st T20I Dream11 Prediction, Today Match SL vs NZ, SL vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NZ Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News