இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs New Zealand 2nd ODI Dream11 Prediction: நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. இதனால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பாப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
SL vs NZ 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
- இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
- நேரம் - நவம்பர் 17, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)
SL vs NZ 2nd ODI Pitch Report
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் போட்டி பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 45 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 26 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 248 ரன்களாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
SL vs NZ 2nd ODI: Where to Watch?
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனி பார்க்க விரும்புவோர் சோனி லிட் ஓடிடி தளத்திலும், ஃபேன் கோடி செயலியிலும் இப்போட்டியை நேரலையில் காண முடியும்.
SL vs NZ ODI Head To Head Record
- மோதிய போட்டிகள் - 103
- நியூசிலாந்து - 55
- இலங்கை - 42
- முடிவில்லை - 09
Sri Lanka vs New Zealand 2nd ODI Probable Playing XI
இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஜெஃப்ரி வன்டர்சே, ஜனித் லியானகே, மகேஷ் தீக்ஷன, அசித்த ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்க.
நியூசிலாந்து உத்தேச லெவன்: வில் யங், டிம் ராபின்சன், ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் ஹே, மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், இஷ் சோதி, ஆடம் மில்னே
SL vs NZ 2nd ODI Dream11 Team
- விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ்
- பேட்ஸ்மேன்கள் - வில் யங், பதும் நிஷங்கா (கேப்டன்), டிம் ராபின்சன்
- ஆல்ரவுண்டர் - கிளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), மிட்செல் சான்ட்னர், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா
- பந்துவீச்சாளர்கள் - மஹீஷ் தீக்ஷனா, ஆடம் மில்னே
SL vs NZ 2nd ODI Dream11 Prediction, SL vs NZ Dream11 Prediction, Today Match SL vs NZ, SL vs NZ ODI Series, SL vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs New Zealand
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.