Sri Lanka vs New Zealand 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், இப்போட்டியில் வென்றால் மட்டும் தொடரை இழக்கமால் சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SL vs NZ 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
  • இடம் - ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம் - நவம்பர் 10, இரவு 7மணி (இந்திய நேரப்படி)

SL vs NZ 2nd T20I Pitch Report

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 25 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 15 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்கள். பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நல்ல உதவி கிடைக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs NZ 2nd T20I: Where to Watch?

Advertisement

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனி பார்க்க விரும்புவோர் சோனி லிட் ஓடிடி தளத்திலும், ஃபேன் கோடி செயலியிலும் இப்போட்டியை நேரலையில் காண முடியும். 

SL vs NZ T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 24
  • நியூசிலாந்து - 13
  • இலங்கை - 08
  • முடிவில்லை - 03

Sri Lanka vs New Zealand 2nd T20I Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க (கே), பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பதிரானாஅ, நுவன் துஷார

நியூசிலாந்து உத்தேச லெவன்: டிம் ராபின்சன்/ஹென்றி நிக்கோலஸ், வில் யங், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்ச் ஹே, ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர் (கேட்ச்), இஷ் சோதி, ஜகாரி ஃபௌல்க்ஸ், ஜேக்கப் டஃபி/லோக்கி ஃபெர்குசன்

SL vs NZ 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ், குசால் பெரேரா (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - வில் யங், ஹென்றி நிக்கோலஸ்
  • ஆல்ரவுண்டர் - கிளென் பிலிப்ஸ் (துணை கேப்டன்), கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா
  • பந்துவீச்சாளர்கள் – மிட்செல் சான்ட்னர், லோக்கி ஃபெர்குசன், மதீஷா பதிரானா
Advertisement

SL vs NZ 2nd T20I Dream11 Prediction, Today Match SL vs NZ, SL vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs NZ Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs New Zealand

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News