இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 30 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஐடன் மார்க்ரம், தப்ரைஸ் ஷம்ஸி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டி காக்குடன் இணைந்து விளையாடிய ஐடன் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் அதிரடியாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்து சென்றார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 14.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News