இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Oct 12 2024 20:04 IST
Image Source: Cricketnmore

Sri Lanka vs West Indies 1st Test Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 13ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 20ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இலங்கை அணியோ இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பிறகு எதிர்கொள்ளும் முதல் டி20 தொடர் இதுவாகும். இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

SL vs WI 1st T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

SL vs WI 1st T20I: Pitch Report

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 21 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 9இல் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 12 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 209 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SL vs WI 1st T20I: : Where to Watch?

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.  

SL vs WI 1st T20I: Head To Head Record

  • மொத்தம் - 15
  • இலங்கை - 08
  • இங்கிலாந்து - 07
  • முடிவில்லை - 00

Sri Lanka vs West Indies 1st T20I: Probable Playing XI

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கே), சமிந்து விக்கிரமசிங்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷா பதிரானா, அசித ஃபெர்னாண்டோ.

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: ஷாய் ஹோப், அலிக் அதானாஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், ரோஸ்டன் சேஸ், ரோவ்மேன் பவல் (கே), பிராண்டன் கிங், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஜோசப், ஃபேபியன் ஆலன், குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப்.

Sri Lanka vs West Indies 1st T20I Dream11 Prediction

விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப்(துணை கேப்டன்), குசால் மெண்டிஸ்
பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, குசால் பெரேரா, பிராண்டன் கிங், ஆண்ட்ரே ஃபிளெட்சர்
ஆல்ரவுண்டர் - வநிந்து ஹசரங்கா (கேப்டன்), ரொமாரிடோ ஷெப்பர்ட்
பந்துவீச்சாளர்கள் - மதீஷா பதிரானா, அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன்

SL vs WI 1st T20I Dream11 Prediction,SL vs WI Dream11 Prediction, Today Match SL vs WI, SL vs WI T20I Series,SL vs WI Dream11 Team, Fantasy  Cricket Tips, SL vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, West Indies Tour of Sri Lanka, Injury Update of the match between Sri Lanka vs West Indies

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை