இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கல் பதும் நிஷங்கா - கேப்டன் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

Advertisement

அதன்பின் 56 ரன்கள் எடுத்திருந்த நிஷங்கா கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஓஷதா ஃபெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் திமுத் கருணரத்னே சதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய தனஞ்செய டி சில்வாவும் அரைசதம் அடித்தார். 

Also Read: T20 World Cup 2021

இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் திமுத் கருணரத்னே 132 ரன்களுடனு, தனஞ்செய டி சில்வா 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News