Sri Lanka vs West Indies 2nd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையையும் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இலங்கை அணியோ முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

Advertisement

SL vs WI 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புளா
  • நேரம் - அக்.15 இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

SL vs WI 2nd T20I: Pitch Report

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 22 டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 9இல் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 13 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 209 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SL vs WI 2nd T20I: : Where to Watch?

Advertisement

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.  

SL vs WI 2nd T20I: Head To Head Record

  • மொத்தம் - 16
  • இலங்கை - 08
  • வெஸ்ட் இண்டீஸ் - 08
  • முடிவில்லை - 00

Sri Lanka vs West Indies 2nd T20I: Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), பானுக ராஜபக்சே, வனிந்து ஹசரங்க, சமிந்து விக்ரமசிங்க, மஹிஷ் திக்ஷனா, மதிஷா பத்திரனா, அசித்த ஃபெர்னாண்டோ.

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப்(w), ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோவ்மேன் பவல்(c), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷமர் ஸ்பிரிங்கர், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப்

Sri Lanka vs West Indies 2nd T20I Dream11 Prediction

Advertisement

விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப், குசால் மெண்டிஸ்
பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, குசால் பெரேரா, பிராண்டன் கிங் (கேப்டன்), எவின் லூயிஸ்
ஆல்ரவுண்டர் - வநிந்து ஹசரங்கா (துணைக் கேப்டன்), ரொமாரிடோ ஷெப்பர்ட்
பந்துவீச்சாளர்கள் - மதீஷா பதிரானா, ஷமார் ஜோசப், மஹீஷ் தீக்ஷனா

SL vs WI 2nd T20I Dream11 Prediction, SL vs WI Dream11 Prediction, Today Match SL vs WI, SL vs WI T20I Series, SL vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs West Indies

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News