Sri Lanka vs West Indies 1st ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள நிலையில் அதற்கு இத்தொடரில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பகிறது. அதேசமயம் இலங்கை அணியோ டி20 தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

SL vs WI 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
  • நேரம் - அக்.20 இரவு 2.30 மணி (இந்திய நேரப்படி)

SL vs WI 1st ODI: Pitch Report

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 42 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 23 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 253 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 381 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

SL vs WI 1st ODI: Where to Watch?

Advertisement

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.  

SL vs WI 1st ODI: Head To Head Record

  • மொத்தம் - 64
  • இலங்கை - 30
  • வெஸ்ட் இண்டீஸ் - 31
  • முடிவில்லை - 03

Sri Lanka vs West Indies 1st ODI: Probable Playing XI

Advertisement

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா (கே), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த ஃபெர்னாண்டோ

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: எவின் லூயிஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கே), கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், மத்தேயு ஃபோர்டே, அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஹெடன் வால்ஷ் ஜூனியர்

Sri Lanka vs West Indies 1st ODI Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ், ஷாய் ஹோப்
  • பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, பிராண்டன் கிங் (கேப்டன்), எவின் லூயிஸ்
  • ஆல்ரவுண்டர் - வநிந்து ஹசரங்கா (துணைக் கேப்டன்), துனித் வெல்லாலகே, ரொமாரிடோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள் - அசிதா ஃபெர்னாண்டோ, அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி
Advertisement

SL vs WI 1st ODI Dream11 Prediction, Today Match SL vs WI, SL vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs West Indies

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News