இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் ஜனவரி 6ஆம் தேதி முதலும், டி20 தொடர் ஜனவரி 14ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடைபெறவுள்ளது. 

Advertisement

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஜிம்பாப்வே
  • இடம் - ஆர்.பிரமதோசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இத்தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஃபேன் கோட் ஓடிடி தளத்திலும் இத்தொடரை காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 61
  • இலங்கை - 47
  • ஜிம்பாப்வே -  12
  • முடிவில்லை - 02
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

பிரேமாதாச கிரிக்கெட் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்பகிறது. இதனால் பேட்டர்கள் இந்த மைதானத்தில் சோபிப்பது கடிமான ஒன்றாக இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

உத்தேச லெவன்

Advertisement

இலங்கை: குசல் மெண்டிஸ் (கே), பதும் நிஷங்கா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லலகே, சரித் அசலங்கா, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, தில்ஷன் மதுஷங்க, மகேஷ் தீக்ஷனா.

ஜிம்பாப்வே: கிரேக் எர்வின் (கே), கிளைவ் மடாண்டே, டினாஷே கமுன்ஹுகம்வே, லூக் ஜாங்வே, ரியான் பர்ல், சிக்கந்தர் ராஸா, மில்டன் ஷும்பா, பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நகரவா, வெலிங்டன் மசகட்சா, டோனி மோனியுங்கா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம
  • பேட்டர்ஸ்: கிரேக் எர்வின், ரியான் பர்ல், பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள்: சிக்கந்தர் ராஸா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா (துணை கேப்டன்), துனித் வெல்லலகே
  • பந்துவீச்சாளர்கள்: ரிச்சர்ட் ங்கராவா, மகேஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா
Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News