2021ஆம் ஆண்டின் சையத் முஷ்டாக் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாளை டெல்லியில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் காலிறுதி போட்டியில் தமிழ்நாடு அணியும், கேரளாவும் மோதுகின்றன.

Advertisement

ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி இந்த சீசனில் நல்ல ஃபார்மில் உள்ளது. குரூப் சுற்றில் 5 போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு அணி நான்கு போட்டியில் வென்று ஏ பிரிவில் முதலிடத்தில் நிறைவு செய்தது, கோவாவுடன் மட்டும் தோல்வியை தழுவியது. 

தமிழ்நாடு அணியில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சாய் கிசோர், முகமது ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால் அனைவரின் கவனமும் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் மீதே உள்ளது.

அதேசமயம் டி பிரிவில் இடம்பிடித்துள்ள கேரளா அணி விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வென்று 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. தற்போது அந்த அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று நல்ல ஃபார்மில் உள்ளது. 

கேரள அணியில் சஞ்சு சாம்சன், அசாருதீன், ஜலாஜ் சக்சேனா, மிதுன் ஆகியோர் தமிழக அணிக்கு நெருக்கடியை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

சையது முஸ்தாக் அலி தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையே கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் தமிழ்நாடு அணி நான்கு போட்டியில் வென்றுள்ளது. இதனால் நாளைய போட்டியில் யார் வெற்றிபெறுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

உத்தேச அணி 
தமிழ்நாடு அணி:
ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பாபா அப்ரஜித், விஜய் சங்கர்(கே), ஷாரூக்கான், சஞ்சய் யாதவ், நடராஜன், முகமது, சாய் கிஷோர், எம்.அஸ்வின், சந்தீப் வாரியர்.

Also Read: T20 World Cup 2021

கேரள அணி: ரோஹன் குன்னும்மாள், முகமது அசாருதீன், சச்சின் பேபி, சஞ்சு சாம்சன் (கே), சுரேஷ் விஸ்வேஷ்வர், ஜலஜ் சக்சேனா, விஷ்ணு வினோத், சஜீவன் அகில், சுதேசன் மிதுன், பாசில் தம்பி, உன்னிகிருஷ்ணன் மனுகிருஷ்ணன்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News