சிஎஸ்கே வீரர் செய்த உதவி; புகழ்ந்த சோனு சூட்!

Updated: Wed, May 19 2021 19:08 IST
Sonu Sood applauds CSK spinner Karn Sharma for his support to Sood foundation (Image Source: Google)

இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை தனது கோரமுகத்தை வெளிக்காட்டி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பல்வேறு பிரபலங்களும் நிதியுதவி வழங்கியும், தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர். 

இதில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், இந்திய மக்களுக்கு செய்துவரும் உதவிகளால் நிஜ உலகின் ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். 

இருப்பினும் தனது பணியை ஓய்வில்லாமல் செய்து வரும் அவர் தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு, மருத்துவ உபகரணங்கள் உபகரணங்கள் இன்றி அவதிப்படுபவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் தனது பவுண்டேஷன் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அனைவரிடமும் இருந்து பெரும் நிதி மற்றும் பொருட்கள் அனைத்தையும் வைத்து தனது அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் சேவையை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர் ஒருவர் அவரது அறக்கட்டளைக்கு தொடர்ந்து பண உதவி செய்து வருவதாக தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சோனு சூட் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,“சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மாவிற்கு எனது மனப்பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பவுன்டேஷனுக்கு தொடர்ந்து நிதி அளித்து வரும் அவர் இளைஞர்களுக்கு நல்ல ஊக்கமாக திகழ்கிறார். தற்போது சமூக சேவை மூலமாகவும் அவர் முன்னுதாரணமாக மாறியுள்ளார்” என தெரிவித்துள்ளார். 

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது ஒரு போட்டியில் கூட விளையாடாத கரண் ஷர்மா தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை