மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி, பிரிஸ்பேன் ஹீட் மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஸ்காச்சர்ஸ் அணி பெத் மூனியின் நிதான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் பெத் மூனி 40 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி இறுதிவரை போராடி போட்டியை சமன் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 13 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய பெர்த் அணியின் சோபி டிவைன் இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி தங்கள் முதல் வெற்றியைப் பெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News