நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 10.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் மழைக் குறுக்கிட்டதன் காரணத்தினால் ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் அத்துடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.