காயத்தால் கேப்டன் விலகல்; சிக்கலில் தென்ஆப்பிரிக்க அணி!

Updated: Sat, Apr 10 2021 10:17 IST
South Africa Captain Temba Bavuma Out Of T20 Series Against Pakistan (Image Source: Google)

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெய்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த டெம்பா பவுமா, தசைப்பிடிப்பு காரணமாக டி20 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதனால் அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென் தென்ஆப்பிரிக்க அணியை வழிநடத்துவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே குயின்டான் டி காக், ரபாடா, டேவிட் மில்லர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் தவிக்கும் தென்ஆப்பிரிக்க அணிக்கு சில வீரர்கள் காயத்தில் சிக்கியிருப்பது மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. 

இதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்த நல்ல வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை