நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

Advertisement

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement

நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதன்பின் 71 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கைல் வெரைன் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் சவுத்தி, ஹென்றி, ஜேமிசன், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

இதையடுத்து, 426 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினார். டேவன் கான்வே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு பிளெண்டல் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். 

Advertisement

சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கான்வே 92 ரன்னில் வெளியேறினார். பிளெண்டல் 44 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, ஜேன்சன், மகாராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவுக்கும், தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மாட் ஹென்றிக்கும் வழங்கப்பட்டது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News