CT2025: அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்; பெரும் பின்னடைவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸட்ப்ஸ், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்திருந்த ஆன்ரிச் நோர்ட்ஜே தற்போது மீண்டும் காயம் காரணமாக எஸ்ஏ20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. முந்ததாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநால் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த அவர், தற்போது தான் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் கம்பேக் கொடுத்தார்.
இந்நிலையில் கிட்டத்திட்ட் 15 மாதங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு மாற்றுமொரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துளது. அதன்படி நோர்ட்ஜேவுக்கு பதில் தேர்வு செய்யபட இருந்த ஜெரால்ட் கோட்ஸியும் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடைபெற்றுவரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜெரால்ட் கோட்ஸி இத்தொடரின் போது காயமடைந்ததாகவும், இதனால் அவர் எஸ்ஏ20 தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேற்கொண்டு நேற்று பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கோட்ஸி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தேர்வில் இருந்தும் ஜெரால்ட் கோட்ஸி வெளியேறியுள்ளார். முன்னதாக ஆன்ரிச் நோர்ட்ஜேவுக்கு சரியான மாற்று வீரராக ஜெரால்ட் கோட்ஸியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பார்த்த நிலையில், தற்போது அவரும் காயமடைந்துள்ளதால் மற்று வீரரை தேடுவதில் அந்த அணி சிக்கலை சந்தித்துள்ளது. இருப்பினும் குவேனா மபாகா, ஓட்னில் பார்ட்மேன் ஆகியோரில் ஒருவார் வாய்ப்பை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென்.