தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நாளை (ஆகஸ்ட் 07) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை) டிரினிடாட்டில் தொடங்கவுள்ளது.

Advertisement

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்செனிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அறிமுக வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கி மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சில சாதனைகளை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இத்தொடரில் ரபாடா மேற்கொண்டு 9 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300ஆவது விக்கெட்டை பதிவுசெய்வதுடன், தென் ஆப்பிரிக்க அணிக்காக இச்சாதனையை படைக்கும் 6ஆவர்கு வீரர் எனும் பெருமையையும் பெறுவார். 

இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் 112 இன்னிங்ஸ்களில் 291 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மேலும் தற்போது தென் aaப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜாக் காலிஸுடன் (291) கூட்டாக ஆறாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் தென் அப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டேல் ஸ்டெய்ன், ஷான் பொல்லாக், மக்காயா நிடினி, ஆலன் டொனால்ட் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், இயன் போத்தம் (528 விக்கெட்), ரங்கனா ஹெராத் (525 விக்கெட்) போன்ற முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பைப் காசிசோ ரபாடா பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 228 போட்டிகளில் 276 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள காகிசோ ரபாடா மூன்று வடிவிலும் சேர்த்து மொத்தமாக 519 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News