தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா - இந்தியா
  • இடம் - நியூலாண்ட்ஸ், கேப்டவுன்
  • நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்த ஒருநாள் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

Advertisement

அதிலும் கடந்த போட்டியில் மாலன், டி காக், ஐடன் மார்க்ரம், பவுமா, டுசென்  என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தில் அணியின் வெற்றிக்கு பங்காற்றினர். 

அதேசமயம் பந்துவீச்சில் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், நிச்சயம் இப்போட்டியிலும் வென்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் பேட்டிங்,பவுலிங் என இரு பிரிவிலும் இந்திய அணி சொதப்பியது, பந்துவீச்சாளர்கள் தேவையான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றாததும், பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடாததும் அணியின் தோல்விக்கான காரணங்களாக பார்க்க படுகிறது. 

Advertisement

அதன் காரணமாக அடுத்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி சில மாற்றங்கள் இருக்கும் என்பதை அணியின் கேப்டன் கேஎல் ராகுல் உறுதிசெய்துள்ளார்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -86
  • தென் ஆப்பிரிக்கா வெற்றி - 48
  • இந்தியா வெற்றி - 35
  • முடிவில்லை - 3

உத்தேச அணி

Advertisement

தென் ஆப்பிரிக்கா : குயின்டன் டி காக், ஜென்னெமன் மலான், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா(கே), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி இங்கிடி

இந்தியா: கேஎல் ராகுல் (கே), ஷிகர் தவான், விராட் கோலி,ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர்/ சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார்/ பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்/ முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - ஷிகர் தவான், விராட் கோலி, ஜென்னெமன் மாலன், ரஸ்ஸி வான் டெர்-டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள் - டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ
  • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், தப்ரைஸ் ஷம்சி
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News