பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

Advertisement

அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக டெம்பா பவுமா தொடரும் நிலையில், காயத்தால் சமீப காலங்களில் விளையாடாமல் இருந்த ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோரும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஆன்ரிச் நோர்ட்ஜே மீண்டும் காயமடைந்து இத்தொடரில் இருந்து விலகினார்.

Advertisement

மேற்கொண்டு நோர்ட்ஜேவுக்கு பதில் தேர்வு செய்யபட இருந்த ஜெரால்ட் கோட்ஸியும் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரின் போது காயமடைந்தது அந்த அணிக்கு பின்னடைவாக உருவானது. தற்போது அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லரும் காயமடைந்துள்ளார். 

நேற்று நடைபெற்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான் லீக் போட்டியின் போது மார்கஸ் ஸ்டொய்னிய் அடித்த பந்தை தடுக்கு முயற்சியில் டேவிட் மில்லர் காயமடைந்தார். இதனையடுத்து அவர் ராயல்ஸ் அணியின் மருத்துவ குழுவின் பரிசோதனைக்கு பிறகு களத்தில் இருந்தும் வெளியேறினார். மேலும் அவரால் உதவியின்றி நடக்க முடிந்தாலும், சிறிது சிரமத்துடன் உடை மாற்றும் அறைக்கு படிக்கட்டுகளில் ஏறினார்.

மில்லரின் காயத்தின் தீவிரம் என்ன என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவரின் காயம் தீவிரமடையும் பட்சத்தில் அது தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் தலைவலியை கொடுக்கும். ஏனெனில் ஏற்கெனவே நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து கயாமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான மற்ற வீரர்களை தேர்வு செய்வதில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரியம் பெரும் சவால்களை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸ்ஸி வான்டெர் டுசென்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News