ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இத்தொடர் நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இத்தொடர்களுக்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீயை நியமித்துள்ளனர். அதன்படி ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள், அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரையிலும் சௌதீ ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணிக்காக கடந்த 2008அம் ஆண்டு அறிமுகமான டிம் சௌதீ, இதுநாள் வரையிலும் 107 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 126 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 776 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். பின்னர் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டிம் சௌதீ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். 

Also Read: LIVE Cricket Score

இந்நிலையில் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டிம் சௌதீயை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் செயல்பட்டு வரும் நிலையில், தற்சமயம் மற்றொரு நியூசிலாந்து ஜாம்பவானையும் இங்கிலாது கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர்கள் குழுவில் இணைத்துள்ளது அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News