Sunrisers Hyderabad vs Delhi Capitals Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisement

இத்தொடரில் நாளை நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சன்ரைசர்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

SRH vs DC Match Details

  • மோதும் அணிகள்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மே 05, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Rajiv Gandhi International Stadium, Hyderabad Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 55ஆவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இது அதிக ஸ்கோர்கள் கொண்ட மைதானம் என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 287 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 242 ரன்களும் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்து மைதானமாக உள்ளது. இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அதிக ரன்களை அடிக்க உதவும்.

SRH vs DC: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SRH vs DC Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 25
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 12

SRH vs DC Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல் (கேப்டன்), அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ்.

SRH vs DC Predicted Playing 11

Sunrisers Hyderabad - அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி.

இம்பேக்ட் வீரர் - ஜீஷன் அன்சாரி.

Delhi Capitals - அபிஷேக் போரல், ஃபாஃப் டு பிளெசிஸ், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

இம்பேக்ட் வீரர் - அசுதோஷ் சர்மா.

SRH vs DC Dream11 Prediction, SRH vs DC, SRH vs DC Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, SRH vs DC Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sunrisers Hyderabad vs Delhi Capitals

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News