ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சன்ரைசர்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்விகளுடன் 9ஆவது இடத்தில் உள்​ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து சிந்திக்க முடியும் என்பதால், அதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் அந்த அணியும் எஞ்சியுள்ள போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசெனையே அதிகம் சார்ந்துள்ளது. அதனால் மற்ற பேட்டர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, ஈஷான் மலிங்கா.

Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்களைத் தழுவி புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றிகளை பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும் என்பதால் அந்த அணி கூடுதல் முயற்சியுடன் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தமட்டில் கருண் நாயர், அபிஷேக் போரல், அக்ஸர் படேல், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தமட்டில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் உள்ளிட்டோர் அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா உள்ளிட்டோரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. 

Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 25
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 12

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல் (கேப்டன்), அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News