Sunrisers Hyderabad vs Gujarat Titans Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அடுத்தடுத்த தோல்விக்களுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SRH vs GT: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - ஏப்ரல் 06, இரவு 3.30 மணி (இந்திய நேரப்படி)

SRH vs GT Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 19ஆவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இது அதிக ஸ்கோர்கள் கொண்ட மைதானம் என்பதால் பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 287 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 242 ரன்களும் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்து மைதானமாக உள்ளது. இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அதிக ரன்களை அடிக்க உதவும்.

SRH vs GT: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SRH vs GT Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • குஜராத் டைட்டன்ஸ் - 03
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01
  • முடிவில்லாதது - 01

SRH vs GT Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- ஜோஸ் பட்லர் (துணைக்கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட் (கேப்டன்), ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அனிகேத் வர்மா
  • ஆல்-ரவுண்டர் - நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்து வீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், முகமது சிராஜ்.
Advertisement

Sunrisers Hyderabad vs Gujarat Titans Probable Playing XI

Sunrisers Hyderabad Probable Playing XI: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, கமிந்து மெண்டிஸ், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், சிமர்ஜீத் சிங், முகமது ஷமி.

இம்பாக்ட் வீரர் - ஜீஷன் அன்சாரி.

Advertisement

Gujarat Titans Probable Playing XI: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இம்பாக்ட் வீரர் - இஷாந்த் சர்மா.

SRH vs GT Dream11 Prediction, SRH vs GT, SRH vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, SRH vs GT Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sunrisers Hyderabad vs Gujarat Titans

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News