Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடவுள்ளன. 

Advertisement

SRH vs KKR Match Details

  • மோதும் அணிகள்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
  • நேரம் - மே 25, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Arun Jaitley Stadium, Delhi Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 68ஆவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 14 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 9 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரையில் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 145 ரன்களாக உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை மாறுகிறது. ஏனெனில் கடந்த முறை இங்கு நடைபெற்ற 5 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், இது அதிக ரன்களைக் கொண்ட ஆட்டங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

SRH vs KKR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SRH vs KKR Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09

SRH vs KKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி.
Advertisement

SRH vs KKR Predicted Playing 11

Sunrisers Hyderabad XI : அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், இஷான் மலிங்கா.

இம்பாக்ட் வீரர் - ஹர்ஷ் துபே.

Advertisement

Kolkata Knight Riders XI : சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ரிக் நோர்கியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

இம்பாக்ட் வீரர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.

SRH vs KKR Dream11 Prediction, SRH vs KKR, SRH vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, SRH vs KKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News