ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடவுள்ளன.இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்​மின்ஸ் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்விகளை பெற்று பிளே  ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் அந்த அணி விளையாடவுள்ளது. அதற்கேற்றவகையில் அந்த அணி கந்த சில போட்டிகளாக வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.  

அணியின் பேட்டிங்கில் ஆபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், அனிகெத் வர்மா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுகின்றனர். அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், இஷான் மலிங்கா.

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிவுள்ள 13 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி மற்றும் இரண்டுமுடிவில்லை என 12 புள்ளிகளுடன் பட்டியலில் 7ஆம் இட்த்தில் உள்ளது. இதன் காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள கேகேஆர் அணி தொடரின் கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அணியின் பேட்டிங் ஆர்டரில் ரஹானே, ரகுவன்ஷியைத், ஆண்ட்ரே ரஸல் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் பந்துவீச்சு துறையில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக உள்ளது. 

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ரிக் நோர்கியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி.
     

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News