Advertisement

இந்தியாவில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்து செய்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் அதிர்ச்சி தோல்விகளைச் சந்தித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனை எதிர்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்களில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், இஷான் கிஷான், திலக் வர்மா, டிம் டேவிட் போன்ற வீரர்கள் சோபிக்க தவறியதே அந்த அணியின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் பந்துவீச்சில் எப்போதும் கலக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் இந்த வரும் ஜெரால்ட் கோட்ஸியும் இடம்பிடித்துள்ளது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இருப்பினும் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் பெருமளவில் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தங்களது முதல் போட்டியில் கேகேஆர் அணியிடம் 4 ரன்களில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி கொடுத்தது. அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமாத் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஹென்ரிச் கிளாசென் தனது முதல் போட்டியிலேயே சிக்சர் மழை பொழிந்ததுடன் தோல்வியின் விழிம்பில் இருந்த ஹைதராபாத் அணியை இறுதிவரை அழைத்து சென்றது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

அதேசமயம் மற்ற பேட்டர்களும் அவருக்கு துணையாக விளையாடும் பட்சத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றியைத் தடுப்படு சற்று கடினம் தான். மறுபக்கம் அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரது செயல்பாடுகள் அணிக்கு பெரும் நன்மையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பாட் கம்மின்ஸ் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இதனால் அணியின் பந்துவீச்சில் சில மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றவகையில் வாஷிங்டன் சுந்தர் அல்லது வநிந்து ஹசரங்கா ஆகியோரில் ஒருவர் இப்போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. 

பிட்ச் ரிப்போர்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இங்குள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களுக்கு இங்கு கொஞ்சம் சாதகம் அதிமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 196 ரன்கள். மேலும் இரவு நேர போட்டி என்பதால் பனியின் தாக்கமும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு உதவலாம்.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • மும்பை இந்தியன்ஸ் - 12
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Advertisement

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சென்/ வநிந்து ஹசரங்கா, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.

மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வுட்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, டெவால்ட் ப்ரீவிஸ்
  • ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா, ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரிட் பும்ரா, டி நடராஜன், ஜெரால்ட் கோட்ஸி.

SRH vs MI IPL 2024 Dream11 Prediction, Today Match SRH vs MI, SRH vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, SRH vs MI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Mumbai Indians

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News