Sunrisers Hyderabad vs Punjab Kings, IPL 2024 Dream11 Team: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் நாளை மாலை நடைபெறும் 69ஆவது லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை பிடிக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும். அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் தொடரை வெற்றியுடன் முடிக்க முனைப்பு காட்டும். இதனால் இப்போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

SRH vs PBKS: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மதியம் 3.30 மணி
Advertisement

SRH vs PBKS, Pitch Report

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அதன்படி அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 277 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. இந்த மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்க புரியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SRH vs PBKS Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 22
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 15
  • பஞ்சாப் கிங்ஸ் - 07

SRH vs PBKS Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Sunrisers Hyderabad vs Punjab Kings Probable Playing XI

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்ஷிம்ரன் சிங், அதர்வா டெய்டே, ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

SRH vs PBKS, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென்
  • பேட்ஸ்மேன்கள் - ரைலீ ரூஸோவ், டிராவிஸ் ஹெட் (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), அஷுதோஷ் சர்மா
  • ஆல்ரவுண்டர் - ஷஷாங்க் சிங், நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

SRH vs PBKS Dream11 Prediction, Today Match Prediction, Today Match SRH vs PBKS, SRH vs PBKS Dream11 Team, Fantasy Cricket Tips, SRH vs PBKS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Punjab Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News