விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துமுடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.

Advertisement

இத்தொடரில் முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் 549 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியைத்தழுவியது. மேலும் ஆர்சிபி அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை நாளைய போட்டியிலும் ஆர்சிபி அணி தோல்வியடையும் பட்சத்தில், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும் முதல் அணி எனும் மோசமான நிலைக்கும் தள்ளப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அதன்படி அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 277 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. இந்த மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்க புரியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10
  • முடிவில்லை - 01
Advertisement

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), விராட் கோலி, ராஜத் பட்டிதார், வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரோர், கர்ண் சர்மா, லாக்கி ஃபெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஹென்ரிச் கிளாசென் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ரஜத் படிதார், விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள்: பாட் கம்மின்ஸ், டி.நடராஜன்
Advertisement

SRH vs RCB IPL 2024 Dream11 Prediction, Today Match Prediction, Today Match SRH vs RCB, SRH vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, SRH vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Royal Challengers Bangaluru

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News