Punjab Kings vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

PBKS vs RR: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் -  மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - ஏப்ரல் 05, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

PBKS vs RR Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 18 போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் தட்டையான மேற்பரப்பைக் கொண்டுள்ளதன் காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்காது. அதன் காரணமாக இது மற்றொரு அதிக ஸ்கோரிங் ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது, மேலும் பந்து வீச்சாளர்கள் வேகத்தை மாற்றுவதையோ அல்லது வைட் யார்க்கர்களையோ நம்பியிருக்க வேண்டியிருக்கும். பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்வது சற்று சாதகமாக இருக்கலாம். 

PBKS vs RR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PBKS vs RR Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 28
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 16
  • பஞ்சாப் கிங்ஸ் – 12

PBKS vs RR Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், சஞ்சு சாம்சன் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (துணைக்கேப்டன்), நேஹால் வதேரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்க, ரியான் பராக், மார்கோ ஜான்சன்
  • பந்து வீச்சாளர்கள்- ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷ்தீப் சிங்.
Advertisement

Punjab Kings vs Rajasthan Royals Probable Playing XI

Punjab Kings Probable Playing XI: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இம்பாக்ட் வீரர் - நேஹால் வதேரா.

Advertisement

Rajasthan Royals Probable Playing XI: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

இம்பாக்ட் பிளேயர் - குமார் கார்த்திகேயா.

PBKS vs RR Dream11 Prediction, PBKS vs RR, PBKS vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs RR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Rajasthan Royals

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News